டிப்பர் லாரியில் செம்மண் கடத்தியவர் கைது

நாலாட்டின்புத்தூர் அருகே டிப்பர் லாரியில் செம்மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-22 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார்கோபாலபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த லாரியில் அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கழுகுமலை அருகே உள்ள நாயக்கர் பட்டியை சேர்ந்த மாடசாமி மகன் காளிராஜ் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 யூனிட் செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்