லாரியுடன் ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி சென்றவர் கைது

லாரியுடன் ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி சென்றவர் கைது

Update: 2022-08-17 16:57 GMT

பரமக்குடி

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து கடந்த மாதம் 24-ந் தேதி 510 அரிசி மூடைகளுடன் நின்று கொண்டிருந்த லாரியை கடத்தியதாக சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்குறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் சரவணகுமார்(வயது 29) என்பவரை பரமக்குடி நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்