மனைவியை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-31 18:48 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 54). இவரது மனைவி முத்துராக்கு. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துராக்கு தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இட்லி வியாபாரம் செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது முத்துராமலிங்கம் கத்தியால் முத்துராக்கை குத்தினார். இதில் படுகாயமடைந்த முத்து ராக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பகவதியம்மாள் இந்த வழக்கை விசாரித்து முத்துராமலிங்கத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்