மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே அருகன்குளம் அனந்தகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). கொத்தனார். இவர் கடந்த 15-ந்தேதி தாழையூத்தில் மொசைக் கல் வெட்டும் எந்திரத்தை வாடகைக்கு வாங்கி கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.