வேளாங்கண்ணியில் பிணமாக கிடந்த முதியவர்

வேளாங்கண்ணியில் முதியவர் பிணமாக கிடந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2022-09-01 16:30 GMT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி குழந்தை ஏசு ஆலயத்திற்கு பின்புறம் 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிைடத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்