மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

திருவாடானை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-27 18:39 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா சி.கே.மங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 39). இவர் நேற்று முன்தினம் சி.கே. மங்கலத்தில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் முன்பு உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்