திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிாிழந்தாா்.

Update: 2022-11-18 18:45 GMT

ராமநத்தம், 

திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சரவணன் (வயது 26). இவா் சென்னையில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வந்தார். விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்த சரவணன் சம்பவத்தன்று, தனது மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டார். தொளார் கைகாட்டி அருகே வேப்பூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்