மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-18 19:20 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை (வயது 71). இவர் காந்தி மைதானத்தில் உள்ள தனது குடோனுக்கு செல்வதற்காக நாகராஜன் என்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நாகராஜன் ஓட்டிச் சென்றார். அப்போது வேலாயுதபுரத்தில் லோடுமேனை பார்த்து பேசுவதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முயன்றபோது சேர்மதுரை தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சேர்மதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்