லாரி மோதி கொத்தனார் பலி

லாரி மோதி கொத்தனார் பலியானார்.

Update: 2023-06-27 19:11 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பாப்பாநாட்டைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது39). கொத்தனார். நேற்று முன்தினம் செல்வக்குமார் பாப்பாநாடு- மதுக்கூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி செல்வக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்