தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை காவிரி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது38). விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அன்பழகன் சம்பவத்தன்று வீட்டிலேயே தூக்குப்போட்டுக் கொண்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி விஜயலட்சுமி கபிஸ்தலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.