சுடுகாட்டில் மனித எலும்புவைத்து மயான பூஜை

சுடுகாட்டில் மனித எலும்புவைத்து மயான பூஜை

Update: 2023-02-19 12:56 GMT

நல்லூர்

திருப்பூர் நல்லூர் அங்காளம்மன் கோவில் மாக சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுடுகாட்டில் மனித எலும்புக்கூடு வைத்து மயான பூைஜ நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அங்காளம்மன் கோவில்

திருப்பூர் முத்தணம்பாளையத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வெள்ளி கவச அலங்காரத்தில் நாதஸ்வரம் முழங்க மேல்மலையனுர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கங்கணம் கட்டப்பட்டு நந்தீஸ்வரர் அழைக்கப்பட்டார். இரவு 12 மணிக்கு அம்மன் அலங்காரம், மகா சிவராத்திரி, தேவேந்திர பூஜை நடைபெற்றது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன், அகோர வீரபத்திரர், இருளப்பன் சாமிகளுக்கு பம்பை ஒலிக்க பூஜை செய்யப்பட்டது. பின்னர் முகம் எடுத்து ஆடி கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் ரத்த சோறு இறைத்தனர். காலை 4 மணியளவில் முத்தணம்பாளையம், சுடுகாட்டில் காட்டில் மயான பூஜை செய்யப்பட்டது. அங்கு புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு வாயில் கவ்விய வாறு பூசாரிகள் சாமியாடினர். அப்போது படுத்திருப்பது போல் மண்ணால் செய்யப்பட்ட அங்காளபரமேஸ்வரி சாமி சிலையின் தலை மீது எலும்புக்கூடுகளை வைத்து பலிகொடுக்கப்பட்ட ஆடு, கோழி, பன்றி ரத்தம் விடப்பட்டது. அதை தொடர்ந்து வல்லாள கண்டனை சம்ஹாரம் செய்த நிகழ்வு நடைபெற்றது.

தங்க கவச அலங்காரம்

காலை 5 மணியளவில் சக்தி விந்தை அழைப்பும், அங்காளம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8 மணியளவில் ரிஷப வாகனத்தில் பவனி வருதல், 9 மணிக்கு பாகை விளையாட்டுதல் அம்மன் வரலாற்றை பாட்டுடன் எடுத்துரைத்தனர். சிறுவர்களின் நடனத்துடன், பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி மகா சிவராத்திரியை கொண்டாடினர். மேலும் வருகிற 26-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற உள்ளது

நல்லூர் விஸ்வேஸ்வரர் சுவாமி, விசாலாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. கே.செட்டிபாளையத்தில் உள்ள உண்ணாமுலை அம்பிகை, உடனமர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி ெகாண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து மகா சிவராத்திரியை கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்