கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது
மன்னார்குடியில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்;
மன்னார்குடி:
மன்னார்குடி மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சாந்தி (வயது 55). மன்னார்குடி கனகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பிபாலமுருகன்(50). இவர் மன்னார்குடியில் அடகு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சாந்தி வீட்டு பராமரிப்பு செலவுக்கு சின்னத்தம்பிபாலமுருகனிடம் ரூ. 50 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இந்தநிலையில் சாந்தி மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். இதில் சின்னத்தம்பிபாலமுருகனிடம் வாங்கிய கடனுக்கு அசலுக்கும் மேல் வட்டி கொடுத்து விட்டதாகவும், மேலும் பணம் கேட்டு தன்னை தொல்லை செய்வதாக புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பிபாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.