சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் நகைகளை பறிக்க முயன்றவர் கைது

வந்தவாசியில் சாலையில் நடந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டரின் மனைவியிடம் நகைகளை பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-01 12:25 GMT

வந்தவாசி

வந்தவாசியில் சாலையில் நடந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டரின் மனைவியிடம் நகைகளை பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

சாலையில் நடந்து வந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், சென்னை மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுசுயா. இவர்களின் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

அதில் அனுசுயா பங்கேற்று விட்டு இரவு 10 மணி அளவில் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவர், சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அனுசுயா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, நெக்லஸ் ஆகியவற்றை பறிக்க முயன்றார். மேலும் காதில் அணிந்திருந்த கம்பலை பிடித்து இழுத்துள்ளார். அதில் அனுசுயாவின் காதில் இருந்து ரத்தம் கொட்டியது.

அவர் திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக ெசன்றவர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் நகைகளை அங்கேயே போட்டு விட்டு மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். அந்த வழியாக சென்றவர்கள் அனுசுயாவை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை பறிக்க முயன்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

மும்முனி பைபாஸ் ரோட்டில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், காஞ்சீபுரம் மாவட்டம் ெபரும்பாக்கம் தாலுகா உக்கம்பெரும்பாக்கம் கிராமம் ஆக்கூர் கூட்டுச்சாலை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் மகன் சங்கர் (வயது 38) என்றும், வந்தவாசி பகுதியில் நடந்து வந்த பெண்ணிடம் நகைகளை பறிக்க முயன்றதாக கூறினார்.

இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சங்கர் மீது பல்வேறு இடங்களில் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்