காதல் ஜோடியிடம் செல்போன்கள் பறித்தவர் கைது

காதல் ஜோடியிடம் செல்போன்கள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-29 18:45 GMT

விருதுநகர் அருகே உள்ள சூரம்பட்டியை சேர்ந்தவர் திருச்செல்வம்(வயது 24). இவர் விருதுநகரில் தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். சம்பவத்தன்று கடையில் முன் பணமாக ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொண்டு திருச்செல்வம் தனது காதலியுடன் உணவு உண்பதற்காக மோட்டார்சைக்கிளில் பாலவநத்தம் சென்று கொண்டிருந்தார். விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் சென்றபோது அவருடைய காதலி இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் திருச்செல்வம் சாைலயோரம் வண்டியை நிறுத்தினார். இதையடுத்து இளம்பெண் அருகில் இருந்த முட்புதரில் சென்றபோது அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி காதல்ஜோடியிடமிருந்து 2 செல்போன்களை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியிடம் செல்போன்களை பறித்த பாலவநத்தம் தெற்குப்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வம்(33) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்