மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
திருவாடானை அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
திருவாடானை அருகே டி.நாகனி ஊராட்சி அலங்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி முத்து பெருமாள் (வயது 80). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முத்துபெருமாள் திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக இளங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(27) என்பவரை கைது செய்தனர்.