மூதாட்டியிடம் நகை-பணம் திருடியவர் கைது

மூதாட்டியிடம் நகை-பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-16 18:29 GMT

மணமேல்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி தெய்வீகரமணி (வயது 65). இவரிடம் இருந்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்களை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் மேற்பார்வையில், மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் நாமிக் இப்ராஹிம் மற்றும் போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நகை-பணத்தை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சீனி நூர்தீன் (வயது 65) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சீனிநூர்தீனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்