கவுன்சிலரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
கவுன்சிலரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிபட்டி தெருவில் வசிப்பவர் அங்குராஜ் (வயது 50). இவர் அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் சங்குரணி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(21) என்ற வாலிபர் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.