திருநங்கையை கத்தரிகோலால் குத்தியவர் கைது
திருநங்கையை கத்தரிகோலால் குத்தியவர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் வடக்கு கோகுலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 40). திருநங்கையான இவர் நேற்று ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வேங்கையன் (55) என்பவர், திருநங்கையை கேலி, கிண்டல் செய்தாராம். இதனால் கண்ணம்மாள் வேங்கையனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேங்கையன் தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் கண்ணம்மாளை குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து வேங்கையனை கைது செய்தனர்.