கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-28 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி நகர பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையிலான போலீசார் ஊட்டி அரசு கலைக்கல்லூரி சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டதில், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஊட்டியை சேர்ந்த பிரவீன் (வயது 19) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்