பூஜை பொருட்கள் கடையில் கஞ்சா விற்றவர் கைது

பூஜை பொருட்கள் கடையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-07 18:45 GMT

நெமிலி

பூஜை பொருட்கள் கடையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் பேரில் நெமிலி போலீசார் மற்றும் தனிப்படையினர் இணைந்து நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பள்ளூர் கிராமத்தில் வாராகி அம்மன் கோவில் அருகே மஞ்சள், குங்குமம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்யும் தணிகைவேல் (வயது 59)என்பவரது கடையில் சோதனை செய்ததில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தணிகைவேலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்