போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
பாபநாசம் அருகே பண்டாரவாடை கோவில் தேவராயன்பேட்டை காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவர் தனது தாய் செல்லம்மாவை மற்றொரு மகன் முத்து அடித்து விட்டதாக பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், முத்துவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளார். அப்போது முத்து போலீஸ் நிலையத்திற்கு வருவதாக கூறினார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் தனது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் (வயது 44) என்பவரிடம் போலீஸ் நிலையத்திற்கு என்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து முத்தமிழ்செல்வன், ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முத்துவை விசாரணைக்கு அழைக்க கூடாது என கூறி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து உள்ளார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து முத்தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.