நாட்டுத்துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவர் கைது

கடலூர் அருகே நாட்டுத்துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-05 20:22 GMT

கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், ஏட்டு குணசீலன் மற்றும் போலீசார் நேற்று மாலை கொண்டங்கி ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திருமாணிக்குழி ஆர்.ஆர். நகர் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த ஜீவா மகன் சக்தி என்கிற சக்திவேல் (வயது 28) என்பவர் நாட்டுத்துப்பாக்கி மூலம் பறவைகளை வேட்டையாடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் எவ்வித உரிமமும் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்ததும், பறவைகளை வேட்டையாடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்