பணம் கேட்டு மிரட்டியவர் கைது

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2022-06-12 15:58 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் ஆரோக்கியபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், தாளமுத்துநகர் கோவில்பிள்ளைவிளையைச் சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (வயது 23) என்பதும், அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மதனை கைது செய்தனர். இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மதன் மீது, ஏற்கனவே ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்