வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர்

மயிலாடுதுறை அருகே வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update:2023-10-11 00:15 IST

ரூ.29 லட்சம் மோசடி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மான்பாக்கம் பகுதியை சேர்ந்த கபீர்தாஸ் மகன் முருகன் உள்பட 14 பேர் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தை சேர்ந்த முகமது அன்வர் ஒலி (வயது 53) என்பவர் தங்களை ஆர்மேனியா நாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.28 லட்சத்து 85 ஆயிரம் பெற்றார்.

ஆனால் குறிப்பிட்டபடி எங்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காததுடன் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கைது

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடி வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முகமது அன்வர் ஒலியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்