டிரக்கர் கண்ணாடியை உடைத்தவர் கைது

டிரக்கர் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-01 19:02 GMT

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழி- புதூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64). இவர் வாடகை டிரக்கர் வைத்துள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் தங்கராஜ் (61). இவர் செல்வராஜிடம் டிரக்கரை வாடகைக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் செல்வராஜ் டிரக்கரை வாடகைக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், செல்வராஜின் டிரக்கர் முன்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்