கோவில் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

தட்டார்மடம் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-06-08 14:42 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே வடக்கு நரையன்குடியிருப்பில் செங்கோட்டை அய்யன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி சுந்தர் வழக்கம்போல் பூஜைகளை முடிந்துவிட்டு கோவிலை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள அறைக்கதவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடிக் கிடந்தன. மேலும் அங்கிருந்த தனது சம்பள பணம் 2 ஆயிரத்தை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை நடத்தி, அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்