திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறு மதுரை காலனி அண்ணாமலை நகரை சேர்ந்த சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி (வயது 51). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு கதவை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 7½ பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதை யாரோ திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருவெண்ணெய்நல்லூர் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைவீதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த அமீர்அப்பாஸ் (45) என்பதும், சிறுமதுரை காலனியை சேர்ந்த செல்வி வீட்டில் நகை, பணம் திருடியவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமீர் அப்பாசை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.