அரசு பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது

அரசு பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-23 19:48 GMT

வாழப்பாடி:-

கெங்கவல்லியை அடுத்த மூலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் வாழப்பாடி அருகே பழனியாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் மணிகண்டன் என்பவர் செந்தில்குமாரிடம் தட்டிக்கேட்டு, தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்