முன்விரோதத்தில் நண்பரை தாக்கியவர் கைது
வள்ளியூரில் முன்விரோதத்தில் நண்பரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் ஹவுசிங் போர்டு காலனி் பகுதியை சேர்ந்தவர் ஞான அருள் செல்வன் (வயது 27). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் சந்துரு (27). இருவரும் நண்பர்கள். இந்தநிலையில் ராஜேஷ் சந்துருவிடம் இருந்து ஞான அருள் செல்வன் மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதனை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் சந்துரு, வள்ளியூர் சர்வீஸ் ரோட்டில் வைத்து ஞான அருள் செல்வனை அவதூறாக பேசி கம்பியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஞான அருள் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு ராஜேஷ் சந்துருவை கைது செய்தார்.