கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-26 19:18 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை இந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை ஒருவர் உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வயலுக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த விவசாயி அறிவழகன் என்பவர் அந்த நபரை பிடித்து, கிராம மக்கள் உதவியுடன் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது73) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து உண்டியலை உடைத்து ரூ.100 பணத்தை திருடிய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்