மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் பேரளம் அருகே உள்ள கருக்கத்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்த போது 140 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை விசாரணை செய்தபோது மயிலாடுதுறை மாவட்டம் பூக்கடை தெருவை சேர்ந்த சேது (வயது24) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.