மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-24 19:15 GMT

நாகை மாவட்டம் காக்கழனி கடுவையாற்று பாலம் அருகே கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காரைக்கால் திரு.பட்டினம் போலகம், புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன்குமார் (வயது22) என்பதும் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து, 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்