மாமண்டூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

மாமண்டூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

Update: 2022-11-03 12:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள தூசி மாமண்டூர் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதைத் தொடர்ந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டு வழிந்தோடும் தண்ணீரில் பூக்களை தூவினார்.

அப்போது ஓ.ஜோதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜூ, செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, வெம்பாக்கம் தாசில்தார் சத்யன், தூசி வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்