கிருமிநாசினி தெளிக்கும் பணியில் முறைகேடு - ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-11 18:09 GMT

சென்னை,

மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், கொரோனா காலக்கட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறியுள்ளார்.

கிருமிநாசினி தெளிப்பதற்கு ஒப்பந்தம் வழங்காமல் அரசு நிதி சுரண்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், சுதந்திரமான விசாரணை குழுவை நியமித்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிடவும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்