பஸ்களில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது-புதிய மோட்டார் வாகன விதி

பஸ்களில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது தமிழ்நாடு புதிய மோட்டார் வாகன விதியில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2022-08-18 10:08 GMT

சென்னை

பஸ்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் சில இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி

*பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது.

*பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.

*நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

* ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது.

என பல்வேறு அறிவுறுத்தல்கள் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்