கன்னியாகுமரிகல்லறை தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

கன்னியாகுமரிகல்லறை தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருந்தது.

Update: 2023-03-12 20:52 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி வாடி தெரு கடற்கரை பகுதியில் கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் உடல்களை புதைக்க போதிய இட வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக எந்த உடலும் அடக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த கல்லறை தோட்டத்தை சமன்படுத்த முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் மணலை தோண்டும் போது அங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. உடனே அங்கிருந்தவர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிணமாக கிடந்தவர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்