முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆண் பிணம்

முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்;

Update: 2022-07-23 16:23 GMT

உப்புக்கோட்டை அருகே உள்ள சடையால்பட்டியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் முகத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்