ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம்

திருவண்ணாமலையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-09-17 16:57 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

இறந்து கிடந்த நபர் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிக்கி உயிர் இழந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து சம்பவம் குறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்