குட்டையில் ஆண் பிணம்
குஜிலியம்பாறை அருகே குட்டையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது.;
குஜிலியம்பாறை அருகே நெல்லம்பாறையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குஜிலியம்பாறை போலீசார் குட்டையில் இருந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் யார்? என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 50 வயது இருக்கும் என தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.