நிலத்தில் உள்ள வீட்டில் ஆண் பிணம்

ஜோலார்பேட்டை அருகே நிலத்தில் உள்ள வீட்டில் ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-02 17:06 GMT

ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி இருந்தார். நேற்று முன்தினம் தன்னுடைய நிலத்திற்கு இளங்கோ சென்ற போது துர்நாற்றம் வீசியது. பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர் குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அனுமந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்