கால்வாயில் ஆண் பிணம்

குலசேகரம் அருகே கால்வாயில் ஆண் பிணம்;

Update: 2023-08-16 18:45 GMT

குலசேகரம், 

குமரி மாவட்டத்தில் தற்போது அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாததால் கால்வாய்களில் முறை வைத்து தண்ணீர் விடப்படுகிறது. இதனால் கால்வாய்களில் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது. இந்தநிலையில் நேற்று மதியம் குலசேகரம் அருகே உள்ள சுருளோடு வெட்டித்திருத்திகோணம் பகுதியில் தோவாளை கால்வாயில் ஒரு ஆண் பிணம் புதர்களில் சிக்கிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியினர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். கையில் கைக்கெடிகாரம் கட்டியிருந்தார். அவர் இறந்து ஓரிரு நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. அவரது பெயர், ஊர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்