முந்திரிக்காட்டில் தூக்கில் தொங்கிய ஆண் பிணம்
முந்திரிக்காட்டில் தூக்கில் ஆண் ஒருவர் பிணமாக தொங்கினார்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அணிகுதிச்சான் கிராமத்தில் இருந்து குமிளங்குழி செல்லும் சாலையில் உள்ள ஒரு முந்திரிக்காட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்த சிலர் பார்த்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தூக்கில் பிணமாக தொங்கியவர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஆண்டிமடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.