ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்

ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது

Update: 2023-03-28 18:45 GMT

காரைக்குடி, 

கோட்டையூர் ஸ்ரீராம் நகர் அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த பாஸ்கர்(வயது 56) என்பதும், இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரியவந்தது. இவர் அங்கு எதற்கு சென்றார், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்