அழுகிய நிலையில் ஆண் பிணம்

அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-12-20 18:45 GMT

முதுகுளத்தூர், 

கடலாடி ஒன்றியம் கீழச்சிறுபோது தின்னாயிர மூர்த்தி கோவில் அருகே கீழச்சிறு போது கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இளஞ்செம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்