பரமத்திவேலூர் அருகே வாய்க்காலில் ஆண் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை
பரமத்திவேலூர் அருகே வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்தது. யார் அவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு இரட்டை வாய்க்கால் பாலத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வாய்க்காலில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.