அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-04-11 17:30 GMT

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்