சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மருத்துவ அலுவலர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுகன்யா, உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மலேரியா பற்றி விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துகூறி, உலக மலேரியா தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அறிவழகன், மருந்தாளுநர் பிரேமானந்தன், செவிலியர்கள் சுகன்யா, உஷா, வசந்தி, ஆனந்தி, லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.