அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-06-24 13:36 GMT

குடியாத்தத்தை அடுத்த போஜனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் காந்தி, லட்சுமி, சுதா, துளசி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதார மேற்பார்வையாளர் டேவிட் சூரியகுமார் கலந்துகொண்டு மலேரியா நோய் எவ்வாறு உருவாகிறது, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற விளக்கங்களை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினார். தொடர்ந்து மலேரியா தடுப்பு உறுதி மொழியை பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் பிரதீப்குமார், சரத்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சசிகலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்