மலைமாதா ஆலய திருவிழா
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் மலைமாதா ஆலய திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் மலைமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 42-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. திருவிழாவையொட்டி காலை, மாலையில் சிறப்புதிருப்பலி, வழிபாடு நடைபெற்றது. கடந்த 24-ந் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடம்பர திருவிழா திருப்பலி நடந்தது.
இந்த திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, ஆரோக்கியம், மரிய அற்புதம் ஆகியோர் நடத்தினர். இதில் நத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தோட்டனூத்து ஊராட்சி தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.