பிரதமர் மோடி சிலையை தத்ரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்

பிரதமர் மோடி சிலையை தத்ரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்

Update: 2023-07-28 15:58 GMT

குடிமங்கலம்

குடிமங்கலத்தையடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக் கலைஞரான இவர் தீவிர ரஜினி ரசிகராவார்.இதனால் ரஜினி ரஞ்சித் என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட இவர் ஒவ்வொரு ரஜினி படம் தயாராகும் போதும் அந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் ஜெயிலர், லால் சலாம் ரஜினி உருவ பொம்மைகளை செய்து அசத்தியுள்ளார்.அத்துடன் ரஜினியின் தாய் தந்தை உருவ பொம்மையை செய்து ரஜினிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் தற்போது தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூரும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் இந்திய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் செய்துள்ளார். இதில் மோடி கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார். வெறும் மண் பாண்டங்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது பிரபலமாகும் விஷயங்களை உருவமாக செய்யும் இந்த மண்பாண்டக்கலைஞருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்